Regional01

தனியார் இடத்தில் மயானம் அமைக்க மாநகராட்சியில் அனுமதி பெற அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் அறிக்கை: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலப் பகுதிகளில்சில இடங்களில் மாநகராட்சியின் அனுமதியின்றி பல்வேறு மதம்மற்றும் இனம் சார்ந்த கல்லறைத்தோட்டம், சுடுகாடுகள் அமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதுதெரியவருகிறது. மாநகராட்சி அனுமதியின்றி தனியாருக்கு சொந்தமான இடத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ கூடாது. அவ்வாறு கல்லறைத் தோட்டம் அல்லதுசுடுகாடு அமைக்க வேண்டுமென்றால் மாநகராட்சியில் முன் அனுமதி பெற வேண்டும். எனவே, அறிவிப்பு செய்யப்படாத பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல்லறைத் தோட்டம், சுடுகாடு பராமரிப்பாளர்கள் உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, வரும் 15.12.2020-க்குள் மாநகராட்சியில் முறைப்படிஅனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாநகராட்சி சேவை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT