உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகே கடலூர் மேற்கு திமுக மாவட்ட செயலாளர் வெ.கணேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர். 
Regional01

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் மறியல் 540 திமுகவினர் கைது

செய்திப்பிரிவு

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து சிதம்பரத்தில் திமுக நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மறியல் நடந்தது. நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் எதிரில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் தலைமையில் மறியல் நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, ரெட்டிச்சாவடி உள்ளிட்ட 8 இடங்களில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 540 பேரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT