கடலூரில் நடைபெற்ற ஊர் காவல் படைக்கு ஆள் சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட தேர்வருக்கு உடற்தகுதி சரிபார்க்கப்பட்டது. 
Regional02

கடலூரில் ஊர் காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம்

செய்திப்பிரிவு

கடலூரில் ஊர் காவல் படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, விருத் தாசலம் ஆகிய உட்கோட்டங்களில் 45 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவைகளை நிரப்ப, கடலூர் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் கடந்த 11 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை 405 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர்  அபிநவ் மேற்பார் வையில் ஆள் சேர்ப்பு தேர்வுநேற்று நடைபெற்றது. விண்ணப் பம் செய்தவர்களில் 350 பேர் மட்டும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு உயரம், மார்பு அளவு, எடை சரிபார்த்தல் மற்றும் நேர்முகதேர்வு நடைபெற்றது.

உதவி காவல் கண்காணிப் பாளர் (பயிற்சி) அங்கிட் ஜெயின், ஊர்காவல் படை வட்டார தளபதி டாக்டர் சுரேந்தரகுமார், ஆயுதப்படை டிஎஸ்பி சரவணன், வட்டார துணை தளபதி கலாவதி, ஊர்காவல் படை உதவி ஆய்வாளர் அருணாச்சலம் ஆகி யோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT