மருத்துவக் கல்வியில் சேர்ந்த மதுரை மாவட்ட அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு ரூ.1 லட்சம் வழங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அருகில், ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள், எம்எல்ஏக்கள். 
Regional01

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மதுரை அரசு பள்ளி மாணவர்கள் 14 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்

செய்திப்பிரிவு

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத் துவக் கல்லூரியில் சேர்ந்த மதுரை மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேருக்கு ஜெய லலிதா பேரவை சார்பாக தலா ரூ. 1 லட்சம் நிதியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

வடகிழக்குப் பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தலைமை வகித்தார். ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் களிடம் கூறியதாவது: வரும் 23, 24 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற் கான முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 313 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்களும், 92 பல் மருத்துவ இடங்களும் கிடைத்துள்ளன.

திமுக ஆட்சியில் தமிழகத்தின் மொத்த மருத்துவ இடங்கள் 1,945 ஆக இருந்தது. அதிமுக ஆட்சியில் 3,650 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரி யில் சேர்ந்துள்ள மதுரை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 14 பேருக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT