காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரிய நூல்களின் மின்புத்தக தொகுப்பை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் உள்ளிட்டோர். 
Regional01

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்அரிய நூல்கள் மின்புத்தகமாக பதிவேற்றம்

செய்திப்பிரிவு

காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம் இணைந்து இப்பணியை மேற்கொண்டன. இப் பல்கலைக்கழகத்தின் நூலகத்திலுள்ள 60 ஆண்டுகள் பழமையான அரிய தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், ஆங்கில இலக்கிய நூல்கள், ஓலைச் சுவடிகள் பல்கலை. பதிப்புத்துறையில் வெளியிடப்பட்ட நூல்கள், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் பாடப் புத்தகங்கள் மின்புத்தகங்களாக மாற்றப்பட்டு நூலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்னன. மாணவர்கள், பொதுமக்கள் மின்புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

மின்புத்தகத் தொகுப்பை துணைவேந்தர் எம்.கிருஷ்ணனிடம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் காமாட்சி வழங்கினார். பல்கலைக்கழகப் பதிவாளர் வசந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT