மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
Regional01

மொழி நமது அடையாளம் தமிழை நாம் பாதுகாப்போம்: நீதிபதி கிருபாகரன் பேச்சு

செய்திப்பிரிவு

மொழி நமது அடையாளம். எனவே தமிழ் மொழியை நாம் பாதுகாப்போம் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்தார்.

உலகத் தொல்லியல் வாரத்தை ஒட்டி, மத்திய தொல்லியல்துறை சார்பில் மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச்சங்க வளாகத் தில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கை யில் 1968-ல் நடந்த அக ழாய்வு, 2019 முதல் நடந்து வரும் கீழடி அகழாய்வு என 40 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட் களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இக் கண்காட்சியை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி என்.கிரு பாகரன் பேசியதாவது:

நமது பண்பாடு, தொன்மையை மறந்து பிற நாடுகளின் பண்பாடு மீது ஈர்ப்பு வந்துவிட்டது. இந்நிலை மாற வேண்டும். எந்தக் கலாச்சாரத்துக்கும் மொழிதான் அடையாளம். எனவே தமிழ் மொழியை நாம் பாதுகாப்போம். 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் கல்வியில் சிறந்தவர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கு கீழடி அகழாய்வு சாட்சியாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக திருச்சி மண்டல தொல்லியல் கண்காணிப்பாளர் டி.அருண்ராஜ் வரவேற்றார். மண்டல இயக்குநர் ஜி.மகேஸ்வரி, உதவி இயக்குநர் வி.வேதாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT