மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் வி.எம்.விஜயசரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வளர்ப்பு பெற்றோர் முறை யில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கு வளர்ப்பு பெற்றோராக விரும்பும் குழந்தை இல்லாத தம்பதியினர் ‘மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு, 21-22, கென்னட் நகர், முத்துப்பட்டி, மதுரை’ என்ற முகவரியில் இலவசமாக விண்ணப்பங்களை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 97895 15915 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.