Regional02

எண்ணெய் பனை சாகுபடி பயிற்சி

செய்திப்பிரிவு

திண்டுக்கல் வேளாண் துறை, அட்மா திட்டத்தின் கீழ் எண்ணெய்ப் பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்குப் பட்டறிவு பயிற்சி முகாம் கோட்டூர் ஆவாரம்பட்டியில் நடந்தது. திட்ட அமைப்பாளர் நாகேந்திரன் தலைமை வகித்தார். விவசாயி கண்ணன் விளைவித்த எண்ணெய்ப் பனை மரங்களை விவசாயிகள் நேரில் பார்வையிட்டனர்.வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் மானியங்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ராஜாங்கம், உதவித் தொழில்நுட்ப மேலாளர் கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT