Regional02

ராமநாதபுரம் அருகே கரை ஒதுங்கிய இறந்த திமிங்கிலம்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் பனைக் குளம் அருகே ஆற்றங்கரை கடற்கரையில் ராட்சத திமிங்கிலம் இறந்த நிலையில் நேற்று கரை ஒதுங்கியது.

உதவி வனப் பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில் வனவர் சந்துரு ராஜா, வனக்காப்பாளர் குணசேகரன் ஆகியோர் திமிங்கிலத்தை மணற்பாங்கான பகுதிக்கு கொண்டு வந்தனர். கால்நடை மருத்துவர் நிஜா முதீன் திமிங்கிலத்தை உடற்கூறு ஆய்வு செய்தார். திமிங்கிலத்தின் எடை 3 டன்னாகவும், நீளம் 9 மீட்டராகவும் இருந்தது. கடற் கரையோரத்தில் திமிங்கிலத்தின் உடல் புதைக்கப் பட்டது.

SCROLL FOR NEXT