Regional02

கடையில் ரூ.2 லட்சம் திருடிய இளைஞர் கைது

செய்திப்பிரிவு

நாமக்கல் கே.எம்.சி. தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். கடந்த 11-ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீ்ட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது.

புகாரின் பேரில் நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றிய இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

இதில், அவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த செல்வக்குமார் (21) என்பதும், எலக்ட்ரிக்கல் கடையில் பணம் திருடியவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT