Regional01

அமித் ஷாவின் மாயாஜாலம் தமிழகத்தில் பலிக்காது எம்.எச்.ஜவாஹிருல்லா கருத்து

செய்திப்பிரிவு

அமித் ஷாவின் மாயாஜால வித்தை கள் தமிழகத்தில் பலிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். அதை ஆமோதித்து அமித் ஷாவும் அரசியல் பேசினார். இது மரபுகளை மீறிய செயல்.

வாரிசு அரசியலை பாஜக முறியடித்து வருவதாக அமித் ஷா பேசியது நகைச்சுவையாக உள்ளது. ஏனெனில், அவரது மகன் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் முக்கிய பதவியில் இருக்கிறார்.

இதேபோல, பாஜக தலைவர் களின் வாரிசுகள் பலர் அமைச்சர்களாக, எம்எல்ஏக் களாக, எம்பிக்களாக உள்ளனர். 2019 மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது போல, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக- அதிமுக கூட் டணி படுதோல்வியைச் சந்திக்கும்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை கைது செய்வது ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயல்.

பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம். எனவே, அமித் ஷாவின் மாயாஜால வித்தைகள் தமிழகத்தில் பலிக்காது. திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் அதே இடத்தில் செயல்பட வலியுறுத்தி வியாபாரிகள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு மமக ஆதரவு அளிக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT