Regional02

புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி டவுனில் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அதை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அமைப்பின் மாநில துணைத் தலைவர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியன், புரட்சிகர இளைஞர் கழக மாநில குழு உறுப்பினர் பேச்சிராஜா ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, பேச்சிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT