டெல்லியில் மொத்தமுள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்துவருகிறது. ஆம் ஆத்மி கட்சி 2-வது இடத்திலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய அமைச்சர் கபில் சிபல் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
டெல்லி பாஜக தலைவர் ஹர்ஷ வர்தன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அசுதோசை விட 52,000 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிகள் 28 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஆனால் 49 நாட்களிலேயே அட்சியை துறந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.