ஆந்திரா மாநிலத்திலிருந்து காகிதம் ஏற்றிக்கொண்டு கொச்சிநோக்கி அவிநாசி வழியாக ராக்கியாபாளையம் புறவழிச் சாலையில் நேற்று மாலை சென்றுகொண்டிருந்த லாரியும்,ராக்கிபாளையம் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி வந்த இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் முரளி (20), அதே ஊரை சேர்ந்த பூச்சந்திரன் மகன் தங்கதுரை (20), தண்டபாணி மகன் சுரேஷ் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்கள் மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்டு,அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.