விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்றுமாலை விழுப்புரம் ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்சியர் அண்ணாதுரை தலை மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள் கூறியது:
கடந்த 2017- 18ம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கே இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களை வழங்கினால், பணம் வழங்க 30 நாட்கள் வரை தாமத மாகிறது. மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை மாற்றி அமைத்து, தடையின்றி வழங்க வேண்டும். மேல்மலையனூர் பகுதியில் விளை நிலங்களில் மின்கோபு ரம் அமைப்பதற்கு, உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கிய பிறகே பணியை மேற் கொள்ள வேண்டும்என்று தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்து பேசிய ஆட்சி யர் அண்ணாதுரை,
“ விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த வரையில், ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க வேண்டிய பருவமழை தற்போது வரை இல்லை. வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் கட்டாயம் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும். ரூ. 3 கோடி வரை காப்பீட்டுத் தொகை வழங்குவதில் நிலுவை உள்ளது.
படிப்படியாக வழங்கப்படும். நந்தன்கால்வாய்த் திட்டத்துக்கு நிலத்தை தானமாக வழங்கிய 19 விவசாயிகளுக்கு பாராட்டுக்கள்.
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் அரசு ஏற்படுத்தியுள்ளதால் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்குவார்கள்” என்றார்.