Regional02

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: 7 பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சியை அடுத்த சூலாங்குறிச்சியில் உள்ள அம்மன் கோயில் அருகே, அக்கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நேற்று முன் தினம் நடத்தியுள்ளனர். இந்தப் போட்டியில் சுமார் 50 காளைகள் பங்கேற்ற நிலையில், மாடு பிடி வீரர்கள் திரளாகக் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். இதனிடையே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதை அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். போலீஸார் வருவதை அறிந்து அப்பகுதி இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீஸார் விழாக்குழுவினர் 7 பேர் மீது நேற்று வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

SCROLL FOR NEXT