திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங் கியது.
நவ.21 முதல் 30-ம் தேதி வரை பத்து நாட்கள் விழா நடை பெறும். நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து சுப்பி ரமணிய சுவாமி, தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந் தருளினார். அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் மாவிலை, தர்ப்பைப்புல், பூமாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தினமும் காலை, மாலையில் பல் வேறு அலங்காரங்களில் எழுந் தருளி, திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28-ம் தேதி மாலை 7 மணி அளவில் பட்டாபிஷேகம் நடைபெறும்.
29-ம் தேதி மாலை கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலை மீது உச்சி பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்படும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அடுத்த நாள் தீர்த்த உற்சவத்துடன் விழா நிறை வடையும். விழா ஏற்பாடுகளை துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.