சோழவந்தானில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று கார்த்திகை திருவோண நட்சத்திரத்தன்று ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.
கோயிலில் சீனிவாச ராகவன் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாக பூஜைகளை நடத்தினர்.
பின்னர் ஐயப்ப சுவாமி, ரத வீதி வழியாக வைகை ஆற்றைச் சென்றடைந்தார். அங்கு 21 அபி ஷேகம் நடைபெற்ற பிறகு, ஆற்றில் சுவாமிக்கு நீராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் சாமி ஆகியோர் செய்தனர்.