Regional01

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் பக்தர்களுக்கு அன்னதானம்

செய்திப்பிரிவு

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சபரிமலையில் மண்டல மகர விளக்கு விழா காலத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: சபரிமலையில் கரோனா விதிகளைப் பின்பற்றி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் 600 பேருக்கும், சனி, ஞாயிறுகளில் 1000 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ட்ரெச்சர் சேவை மற்றும் புண்ணிய பூங்காவனம் சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

சபரிமலை செல்ல முடியாதவர்கள் இருமுடி செலுத்துவதற்கு மதுரை கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல வளாகத்தில் உள்ள  ஐயப்பன் கோயிலில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT