Regional02

சேலம் கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

செய்திப்பிரிவு

சேலம் கொங்கணாபுரத்தில் நேற்று நடந்த கால்நடை சந்தையில் ஆடு, கோழி மற்றும் காய்கறிகள் ரூ.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது

சேலம் கொங்கணாபுரத்தில் வாரம்தோறும் சனிக் கிழமைகளில் கால்நடை சந்தை கூடுகிறது. நேற்று நடந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, கோழிகளை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். ஆடு, கோழிகளை வாங்க ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.

சந்தையில் 4,500 ஆடுகளும், 800 பந்தய சேவல்கள் மற்றும் 2,000 கோழிகளை வியாபாரி கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதேபோல, விவசாயிகள் 10 டன் காய்கறிகளை விற் பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

சந்தையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்து கால்நடைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதுதொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:

கொங்கணாபுரம் சந்தையில் விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் தரமான ஆடு, கட்டு சேவல், கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். 10 கிலோ ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரையும், 20 கிலோ ஆடுகள் ரூ.11,500 முதல் ஆயிரம் ரூ.13 ஆயிரம் வரையும், பந்தய சேவல்கள் ரூ.900 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்றைய சந்தையில் சுமார் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரி கள் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டன. கரோனா தடுப்பு விதிமுறை மீறியவர்களுக்கு கொங்கணாபுரம் பேரூராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர்.

SCROLL FOR NEXT