தமிழக முதல்வரிடம் வேலை வழங்கக்கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு குமாரபாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கணினி உதவியாளராக பணிபுரிவதற்கான உத்தரவை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினாா். அருகில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ். 
Regional02

பணி வழங்கக்கோரி முதல்வரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு கணினி உதவியாளர் பணி

செய்திப்பிரிவு

முதல்வரிடம் வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு குமாரபாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கணினி உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த 18-ம் தேதி கோவை யிலிருந்து சேலம் செல்லும் வழியில் குமாரபாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ப.சாதிக்பாஷா என்பவர் வேலை கேட்டு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் தான் பிளஸ் 2 படித்துள்ளதாகவும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பயிற்சி பெற்றுள்ளதாகவும் ஏதாவது ஒரு வேலை வழங்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.

அம்மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதன்பேரில் மாற்றுத் திறனாளி ப.சாதிக் பாஷா குமாரபாளையம் நகராட்சி பொது சுகாதார பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் கணினி உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டார். இதற்கான பணி ஆணையை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சாதிக்பாஷாவிற்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், கோட்டாட்சியர் ப. மணிராஜ், நகராட்சி ஆணையர் சி. ஸ்டான்லி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT