திருவாரூர் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தினர். 
Regional03

தேசிய மீன்வள கொள்கை வரைவுச் சட்டம் 2020 இரத்து செய்யக்கோரி மீனவ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

செய்திப்பிரிவு

தேசிய மீன்வள கொள்கை வரைவுச் சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு, ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை எம்.பி எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கே.மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில், சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது, தேசிய மீன்வளக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். பாரம்பரிய சிறு வித கடல் மீன்பிடித் தொழிலை அழிக்கக்கூடிய தமிழ்நாடு கடல் மீன்பிடிச் சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். மீனவ விவசாயிகள் என்ற பெயரில் மீனவர்களை மீன்பிடித் தொழிலில் இருந்து அகற்றும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

SCROLL FOR NEXT