Regional01

எம்ஜிஆர் உருவப்படம் சேதம்

செய்திப்பிரிவு

களக்காடு நடுத்தெருவில் தங்கம்மன்கோயில் அருகே எம்ஜிஆர் நினைவு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கண்ணாடி கூண்டுக்குள் எம்ஜிஆரின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த உருவப்படம் நேற்று சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து களக்காடு போலீஸில் நகர அதிமுக செயலாளர் செல்வராஜ் புகார் செய்தார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT