தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சகிலன். குருஸ்புரத்தை சேர்ந்தவர் டைட்டஸ். இருவர் மீதும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைத்தில் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர்கள் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வடபாகம் போலீஸார் அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் நேற்று முன்தினம் இரவு 7 .30 மணி அளவில் காவல் நிலையத்தில் இருந்துச் தப்பி சென்று விட்டனர். இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்ததையடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைப் பிடிக்க எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.