Regional02

இளைஞர் சடலம் மீட்பு

செய்திப்பிரிவு

திருப்பூர் குமார் நகர் அங்கேரிபாளையம் சாலையில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. அதன் அருகே சாலையோரத்தில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

சம்பவ இடத்துக்கு வடக்கு காவல் நிலைய போலீஸார் சென்று, இளைஞரின் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT