Regional02

‘முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்’

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

‘‘நீலகிரி மாவட்ட பூங்கா நுழைவுவாயில்களில், கரோனா தடுப்புவிதிமுறைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

எனினும், பூங்காவுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், மாஸ்க் அணியாமல் செல்கின்றனர். பல நாடுகளில்கரோனா இரண்டாம் அலை மிகவும் ஆபத்தானதாக உள்ளதால், மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.

சமூக இடைவெளி, கை கழுவுதலை முறையாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாத சுற்றுலாப்பயணி களுக்கு ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT