Regional01

பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு காஞ்சி ஆட்சியர் உத்தரவு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் நவ.21 முதல் டிச.10-ம் தேதிவரை பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் (6 முதல் 18 வயதுவரை) பற்றி கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது.

இதன்மூலம் கண்டறியப்படும் குழந்தைகளை, உண்டு உறைவிட பயிற்சி மையங்களில் சேர்த்து,பின்னர் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு அவர்களின் கல்விமேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT