Regional01

லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் ஜீப்பில் இருந்த ரூ.25,000 பறிமுதல்

செய்திப்பிரிவு

மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் நடத்திய சோதனையில், மாநகராட்சி உதவி ஆணையரின் ஜீப்பில் இருந்த கணக்கில் காட்டப் படாத ரூ. 25 ஆயிரம் சிக்கியது.

மதுரை ரயில் நிலையம் அருகி லுள்ள மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகத்தில் மக்களிடமிருந்து லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் அம்புரூஸ் ஜெய ராஜ், ரமேஷ்பிரபு, குமரகுரு உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு அந்த அலுவலகத்துக்குச் சென்றனர். உதவி ஆணையர் (பொறுப்பு) மணி பயன்படுத்தும் ஜீப்பை சோதனையிட்டு ரூ.25 ஆயிரத்தைக் கைப்பற்றினர். இதுகுறித்து கணக்குக் கேட்ட போது, அந்தப் பணம் ஜீப்பில் எப்படி வந்தது என்பது பற்றி தங்களுக்குத் தெரியாது என்று மணியும், அவரது ஓட்டுநர் பாஸ்கரனும் தெரிவித்தனர்.

இதையடுத்து கணக்கில் காட்டப்படாத ரூ.25 ஆயிரத்தை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஒப்படைத்தனர். இது மக்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணமா எனத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு ஏற்ப மேல் நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீஸார் தெரி வித்தனர்.

SCROLL FOR NEXT