Regional02

கரோனா ஊரடங்கு நிவாரணம் கோரி மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கலாம் மாவட்ட நீதிபதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசின் கரோனா ஊரடங்கு நிவாரண நிதி பெறாத மாற்றுத்திறனாளின் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் மனு அளிக்கலாம் என மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இப்பணம் வழங்கப்படுகிறது.

தகுதியிருந்தும் பணம் பெற முடியாதவர்கள், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், உதவித் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற முடியாத மாற்றுத்திறனாளிகள் உடனடியாக மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி வி.தீபாவிடம் மனு அளிக்கலாம்.

நேரில் வர முடியாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் விவரங்களை மனுவாக எழுதி செயலர்/ சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம், மதுரை- 20 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 0452- 2535067 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT