கிருஷ்ணகிரி அருகே போகனப்பள்ளி கிராமத்தில் உள்ள புதூர் மாரியம்மன் கோயிலில் நவகிரக சிலைகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. அடுத்த படம்: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த புதூர் மாரியம்மன். 
Regional02

கிருஷ்ணகிரியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அருகே போகனப் பள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கற்பக விநாயகர், புதூர் மாரியம்மன் கோயில், நவக்கிரக சிலைகளுக்கு நேற்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நள்ளிரவில் இருந்து யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு ஹோமங்கள் நடந்தன.

காலை 8.30 மணிக்கு வேப்பமரம் மற்றும் அரச மரத் துக்கு திருக்கல்யாணம் நடை பெற்றது.

காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீரை ஊர் பிரமுகர்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று கற்பக விநாயகர் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். நவக்கிரகம் மற்றும் புதூர் மாரியம்மன் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT