Regional02

தூத்துக்குடி மீனவர்களை கச்சத்தீவு அருகே விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் லட்சத்தீவில் 10 பேர் கைது

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் இருந்து 8 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இதுதவிர, லட்சத்தீவில் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 8 விசைப்படகுகளில், நேற்று முன்தினம் காலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியுள்ளனர். மீனவர்கள் தங்கள் வலைகளை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி வந்துள்ளனர்.

நீண்ட நேரம் கழித்து, மீனவர்கள் மீண்டும் அப்பகுதிக்கு சென்று தங்களது வலைகளை மீட்டு வந்ததாகவும், தொடர்ந்து கடலில் மீன்பிடித்து வருவதாகவும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மீனவர்கள் கைது

அங்கு ரோந்து வந்த இந்திய கடலோர காவல்படையினர், தடைசெய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக 10 மீனவர்களையும் மடக்கிப்பிடித்து, மினிக்காய் தீவில் உள்ளகடலோர பாதுகாப்பு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT