Regional01

மகளிர் சக்தி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் இருந்து மகளிர் சக்தி தேசிய விருதுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பின்தங்கிய மற்றும் பாதிக் கப்பட்ட பெண்களுக்காக சேவை புரிபவர்களுக்கு தேசிய அளவில் மகளிர் சக்தி விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபருக்கான விருதுக்கு ரூ.1 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கான விருதுக்கு ரூ.2 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். விருதுக்கான விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் www.narisakthipuraskar.wcd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விருதுக்கான விண்ணப் பத்தை இணையதளம் வழி யாகவே வரும் ஜனவரி 21-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவரால் விருது வழங்கப் படும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT