கரோனா தொற்றால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் குடும்பத் தினருக்கு நிவாரண உதவியை வழங்கிய வேலூர் சரக டிஐஜி காமினி. 
Regional01

கரோனா தொற்றால் உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.11.74 லட்சம் நிவாரண உதவி

செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் ரூ.11.74 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நகர காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக சண்முகம் என்பவர் பணி யாற்றி வந்தார். இவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பணியாற் றும் காவலர்கள் விருப்பத்தின் பேரில்11 லட்சத்து 74 ஆயிரத்து 50 ரூபாய் நிவாரண உதவியாக சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை சண்முகத் தின் குடும்பத்தினர் வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவாரண உதவியை சண்முகத்தின் மனைவி திலகவதி மற்றும் அவரது பிள்ளைகளிடம் வேலூர் சரக டிஐஜி காமினி வழங்கினார்.

அப்போது, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ குமார், கூடுதல் காவல் கண்காணிப் பாளர் கண்ணப்பன், ஆம்பூர் உட் கோட்ட துணை காவல் கண் காணிப்பாளர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT