மதுரை கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பேசினார் பி.மூர்த்தி எம்எல்ஏ. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
Regional01

அதிமுகவைவிட கூடுதல் பலத்துடன் தேர்தல் பணி பி.மூர்த்தி எம்.எல்.ஏ. உறுதி

செய்திப்பிரிவு

பணம், அதிகாரம் என அனைத்து வகை யிலும் அதிமுகவைவிட ஒரு மடங்கு கூடுதல் பலத்துடன் சட்டப் பேரவை தேர்தலை சந்திப்போம். திமுகவினர் உத்வேகத்துடன் களப்பணியாற்ற வேண் டும் என பி.மூர்த்தி எம்எல்ஏ பேசினார்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மேலூர், திருப்பாலை, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நேற்று நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ பேசியதாவது:

அதிமுக பணத்தை நம்பி தேர்தலில் நிற்க உள்ளது. பணம், அதிகார பலம் என அதிமுக எதையெல்லாம் செய்து தேர்தலை சந்திக்க உள்ளதோ, அதையெல்லாம் நாமும் செய்வோம். அதற்கு மேலேயும் செய்ய கட்சித் தலைமை திட்டமிட்டு வருகிறது. இதனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் தேர்தல் பணியில் மட்டும் தீவிரம் காட்டுங்கள். எதிர்க்கட்சியாக இருந்து கொண்டே மக்கள் பணியை திருப்தியாக செய்துள்ளோம்.

பாஜக பொய்ப் பிரச்சாரம் செய்து வரு கிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும்.வாக்காளர் திருத்தப்பட்டியல் தயாரிப்பில் நகர் பகுதி யில் கவனமாக செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட நிர்வாகிகள் நேருபாண்டியன், வெங்கடேஷ் மற்றும் ஒன்றிய, நகர் செயலாளர்கள், வாக்குச்சாவடி 2-ம் நிலை முகவர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT