துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் மதுரை வந்தது. இதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அப்போது இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது உடமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். இதில் சுமார் ஒரு கிலோ தங்கக் கட்டிகளை களிமண் உருண்டைக்குள் வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.56.58 லட்சம் இருக்கும் என சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பிரசால்(35), கவுசிக் ராஜா(40) ஆகிய இரு பயணிகளை சுங்கத் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.