கோ.தளபதி 
Regional01

மதுரை மாநகர் திமுக இரண்டாக பிரிப்பு 79 வயதில் மாவட்ட பொறுப்பாளரான பொன்.முத்துராமலிங்கம்

செய்திப்பிரிவு

மதுரை மாநகர் மாவட்ட திமுக வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 79 வயதில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கம் வடக்கு மாவட்டப் பொறுப் பாளராக நியமிக்கப்பட்டுள்ளது கட்சி நிர்வாகிகளிடையே ஆச்சரியத்தை ஏற் படுத்தியுள்ளது.

மாவட்டம்தோறும் கட்சி நிர்வாக ரீதியாக புதிய மாவட்டங்களை திமுக உருவாக்கி வருகிறது. மதுரை மாநகரில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதி களுக்கும் பொறுப்பாளராக முன்னாள் எம்எல்ஏ கோ.தளபதி இருந்து வந்தார். இதை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம்(79) பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 79 வயதில் இவருக்கு பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது மதுரை திமுக வினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: பிரிக்கப்படும் புதிய மாவட்டத்தின் பொறுப்பாளர் பதவியை கைப்பற்ற முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தின் மகன் பொன்.சேது, முன்னாள் எம்எல்ஏ வி.வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ பா.சரவணன், அக்ரி கணேசன் உள்ளிட்ட பலரும் முயற்சித்தனர்.

இந்நிலையில், முக்குலத்தோர் சமூ கத்தைச் சேர்ந்தவர் மற்றும் மூத்த நிர்வாகி என்ற அடிப்படையில் பொன்.முத்துராமலிங்கத்துக்கு இப்பதவியை கட்சித் தலைமை வழங்கியுள்ளது.

கடந்த எம்.பி. தேர்தலில் போட்டியிட பொன்.முத்துராமலிங்கம் சீட் கேட்டும் கிடைக்கவில்லை. இதனால், மாநி லங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று கேட்டு வந்தார். இந்நிலையில்தான் அவரை சமா தானப்படுத்தும் நோக்கில் 79 வய தானாலும், அதை பொருட்படுத்தாது மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப் பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் 22 தொகுதிகள் இருந்தபோதே மாவட்டச் செயலாளராக இருந்தவர் பொன்.முத்துராமலிங்கம். எனவே, தற்போதைய புதிய பொறுப்பை அவர் எளிதாக கையாள்வார்.

தற்போது இவரது கட்டுப்பாட்டில் மதுரை வடக்கு, தெற்கு ஆகிய 2 தொகுதிகள் வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் தெற்கு தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வடக்கு தொகுதி மட்டுமே மீதம் இருக்கும். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பதிலாக மதுரை வடக்கு தொகுதியை எம்எல்ஏ பா.சரவணன் கேட்டு வருகிறார்.

மாவட்ட பொறுப்பாளராகியுள்ள பொன்.முத்துராமலிங்கம் தனது மகனுக்கு இத்தொகுதியை கேட்க வாய்ப்புள்ளது. மேலும் பல முக்கிய நிர்வாகிகள் இத்தொகுதியை குறி வைத்துள்ளனர். எனவே, இத்தொகுதியை கைப்பற்ற போட்டி கடுமையாக இருக்கும்.

மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பா ளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் மதுரை மத்தி, மேற்கு ஆகிய 2 தொகுதிகள் உள்ளன. மத்திய தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் போட்டியிட வாய்ப்புள்ளது. மேற்கு தொகுதியில் மீண்டும் கோ.தளபதியே போட்டியிடும் நிலை உருவாகலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT