Regional02

ராமேசுவரம் எஸ்.ஐ. விபத்தில் மரணம்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே தியாகவன்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (55). இவர், ராமேசுவரம் நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 24-ம் தேதி சத்திரக்குடி காவல் நிலையம் அருகே நடந்து சென்றபோது அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பையா, மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT