Regional01

லாரி அதிபர் கடத்தல் ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது

செய்திப்பிரிவு

நாமக்கல் கணேசபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் டேங்கர் லாரி அதிபர் பொன்னுசாமி (59). இவரிடம் சிவகிரியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இவர் பொன்னுசாமியிடம் தனது வீட்டு பத்திரத்தை கொடுத்து ரூ.8.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடன் விவகாரத்தில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று பொன்னுசாமியை காமராஜ் உள்ளிட்ட சிலர் காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து பொன்னுசாமி மனைவி நிர்மலா நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் கொடநாடு செல்லும் சாலையில் பொன்னுசாமி கடத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற காவல் துறையினர் பொன்னுசாமியை மீட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட காமராஜ், மணிகண்டன், கவின்குமார், இளவரசு, சரவணன், மதி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT