Regional02

மத நல்லிணக்க கொடி நாள் நிதி வசூல் தொடக்கம்

செய்திப்பிரிவு

சாதி, இனம், பயங்கரவாத வன்முறைகளில் அனாதை யாகவோ அல்லது ஆதரவற்றவர் களாகவோ இருக்கும் குழந்தைகளின் கல்வி மற்றும் மறு வாழ்வுக்காக தன்னார்வலர் களிடமிருந்து மத நல்லிணக்க கொடி நாள் நன்கொடை வசூலிக்க நாடு முழுவதும் தேசிய மத நல்லிணக்க வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. நவம்பர் 25-ம் தேதி கொடி நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

தேசிய மத நல்லிணக்க வாரத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் கொடி நாள் நிதி வசூல் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) சீதாலட்சுமி, கியூ பிரிவு கண்காணிப்பாளர் ஜெயராமன் மற்றும் அலுவலக உதவியாளர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT