Regional01

மநீம பொதுச் செயலாளர் முருகானந்தம் மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் சுவர் விளம்பரங்களை செய்திருந்த னர்.

இதில், திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் சுவரில் அனுமதியின்றி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக அரியமங்கலம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச் செயலாளர்(அமைப்பு) முருகானந்தம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT