Regional02

பிரபல உணவகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

செய்திப்பிரிவு

வேலூர் சத்துவாச்சாரியில் பிரபல குழுமத்துக்குச் சொந்தமான உணவகம் உள்ளது. இந்த கட்டிடத் தின் கீழ் தளத்தில் உணவகமும் மேல்தளத்தில் பொது நிகழ்ச்சி அரங்கமும் உள்ளது. இந்த அரங்கில் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், பரிமாறப்பட்ட உணவில் டியூப்லைட் துண்டுகள் இருந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி யடைந்தனர். இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் அந்த உணவகத்தில் நேற்று சோதனையிட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்ததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT