Regional01

விவசாயிகள் சங்கக் கூட்டம்

செய்திப்பிரிவு

பாலமேடு அருகே சாத்தையாறு அணையில் 11 கிராம பாசன விவ சாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் ரமேசன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் செல்வராஜ், அய்யூர் ராஜு, தர்ம ராஜா முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் சாத்தையாறு அணையில் நிரந்தரமாகத் தண் ணீரை தேக்க வைகை, பெரியாறு அணைகளில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அடையாள உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஊராட்சித் தலைவர்கள் சேது சீனிவாசன், அழகுமணி சசி, பெருமாள், பழனிச்சாமி, பழனி நாதன் உட்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT