மதுரை ஓபுளா படித்துறை வாழைக்காய்பேட்டையில் சேறும், சகதியுமான சாலையைச் சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத்தினர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
Regional01

சாலையை சீரமைக்கக் கோரிமார்க்சிஸ்ட், சிஐடியூ ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மதுரை ஓபுளா படித்துறை வாழைக்காய் பேட்டையில் உள்ள சாலை பல ஆண்டுகளாகவே சீரமைக்கப்படாமல் உள்ளது. இச்சாலை மழைக்காலத்தில் நடக்க முடியாத வகையில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இச்சாலையை சீரமைக்கக்கோரி, அப்பகுதி தொழிலாளர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை.

இந்நிலையில் வாழைக்காய்ப் பேட்டை சாலையை விரைந்து சீரமைக்கக்கோரி, 50-வது வார்டு மார்க்சிஸ்ட் கிளைச் செயலாளர் கனிராஜா தலைமையில், வாழைக்காய் பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியூ மூன்று சக்கர சைக்கிள் தொழிலாளர்கள் சங்கக் கிளை தலைவர் மனோகரன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT