வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிய நிலையில், வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நவ.21, 22 மற்றும் டிச.12, 13 தேதிகளில் நடக்கவுள்ளன. அப்போது விடுபடாமல் வாக்காளர்களைச் சேர்ப்பதில் கட்சியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை நடக்கவுள்ளது.
மேலூர் தொகுதிக்கு மூவேந்தர் பண்பாட்டுக்கழகம் மண்டபத்தில் காலை 9 மணிக்கும், மதுரை கிழக்கு தொகுதிக்கு திருப்பாலை குறிஞ்சி மகாலில் காலை 11 மணிக்கும், சோழவந்தான் தொகுதிக்கு அலங்காநல்லூர் கேட்டுக்கடை ராசு ஆசாரி-அங்கம்மாள் திருமண மகாலில் மாலை 4 மணிக்கும் கூட்டம் நடக்கும். வாக்குச்சாவடி முகவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர், பேரூராட்சி, ஊராட்சிச் செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.