Regional01

மதுரை இளைஞர் கொலையில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்தார்

செய்திப்பிரிவு

மதுரையில் நடந்த கொலையில் தொடர்புடையவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந் தார்.

மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கடந்த 15-ம் தேதி மதுரை கீழவெளி வீதியில் உள்ள தேவாலயம் அருகே தனது நண்பருடன் சென்றார். அப்போது காரில் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் முருகானந்தத்தை வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து கீரைத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கொலையில் தொடர் புடைய முதல் குற்றவாளி யான அலெக்ஸ்பாண்டியன்(29) என்பவர் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். இவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் திலிப் பாபு உத்தரவிட்டார். அவரை போலீ ஸார் பழநி கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அலெக்ஸ் பாண்டியனை காவலில் எடுத்து விசாரிக்க கீரைத்துறை போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT