Regional02

சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சபரிமலையில் கட்டுப் பாடுகளை தளர்த்தி கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தேனியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆன்மிக அரசியலை ஆதரி ப்பவர்களுடன் கூட்டணி அமைப்போம். பூரண மது விலக்கு, லஞ்சமற்ற நிலையை ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்.

மதச்சார்பாற்ற நாட்டில் மதச்சார்பு சட்டங்கள் இருக்கக் கூடாது. எனவே பொது சிவில் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். இச்சட்டத்துக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவோம். தேவையற்ற கட்டுப்பாடுகளால் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாதநிலை உள்ளது. விதிமுறைகளைத் தளர்த்தி கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து தேனி ஆட்சியர் மூலம் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT