Regional01

ஈரோட்டில் காவிரி ஆரத்தி வைபவம்

செய்திப்பிரிவு

ஈரோடு காரைவாய்க்காலில் உள்ள சுயம்பு நாகர்கோயிலில் காவிரி ஆரத்தி வைபவ நிகழ்ச்சி நடந்தது.

காவிரி ஆற்றினைப் போற்றி, நன்றி செலுத்தும் வகையில், இந்து ஆன்மிக எழுச்சி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் காவிரி ஆரத்தி வைபவம் நடந்து வருகிறது.

ஈரோடு சவுராஷ்ட்ரா சபை சார்பில் காவிரி நதி ஆரத்தி வைபவ நிகழ்ச்சி ஈரோடு காரை வாய்க்காலில் உள்ள சுயம்பு நாகர்கோயிலில் நேற்று காலை நடந்தது. இதையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காவிரியில் சென்று சேரும் வகையில், பால், மஞ்சள், குங்குமம், மலர் போன்ற பூஜை பொருட்கள் தண்ணீரில் விடப்பட்டு காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தப்பட்டது.

விழாவில், டாக்டர் ஈ.எஸ்.எம்.சரவணன் கலந்துகொண்டு காவிரி நதியின் பெருமை, நதி பாதுகாப்பு பற்றி விளக்கிப் பேசினார்.

இதில் சபையின் தலைவர் கே.சந்திரசேகரன், செயலாளர் ஆர்.என்.கே.குருபரன் உள்ளிட்டோர் மலர்தூவி வணங்கினர்.

SCROLL FOR NEXT