கிருஷ்ணகிரியில் நடந்த தன்னார்வலர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பில் மாவட்ட கல்வி அலுவலர் வேதா பேசினார். 
Regional02

கற்போம், எழுதுவோம் இயக்கத்தின் தன்னார்வலர்களுக்கு சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் தன்னார்வலர் களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில், கற்போம், எழுது வோம் இயக்கம் தொடர்பாக தன்னார்வலர் களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொடங்கியது.

பயிற்சி வகுப்பை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேதா, மரியரோஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், தமிழ்மலர், ஆனந்தன், எமிரிஸ்சியா, ஜாஸ்மின் ராணி, பாத்திமா ஆகியோர் கருத்தாளர்களாக பயிற்சி அளித்தனர்.

இப்பயிற்சியில், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தன்னார்வலர் களை ஊக்கப்படுத்தியும், பயிற்சியின் நோக்கம் குறித்தும், எழுத்தறிவித்தலின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.

வட்டார வள மைய மேற்பார்வை யாளர், கற்பதை ஊக்கப்படுத்தும் விதமாக வாழ்க்கையில் படித்து முன்னேறியவர்களின் வரலாறு குறித்தும், கற்றோர்களால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள் குறித்து பேசினார்.

இப்பயிற்சியில், 28 பாடங்களில் இருந்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை கற்போம், எழுதுவோம் இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கோதண்டபாணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர். 124 தன்னார்வலர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT