பெரம்பலூர் நகரத்துக்குட்பட்ட திமுக பாக முகவர்கள் ஆலோ சனைக் கூட்டம், பாலக்கரை பகுதியிலுள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அக்கட்சி யின் நகரச் செயலாளர் எம். பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் கலந்துகொண்டு புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் எவ்வாறு தேர்தல் பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
இதில் ஆதிதிராவிடர் நலக் குழு மாநில துணை செயலாளர் பா.துரைசாமி, மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன், வழக்கறிஞ ரணி அமைப்பாளர் ப.செந்தில் நாதன், இளைஞரணி அமைப்பா ளர் து.ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.