Regional02

எம்எல்ஏ ஆய்வு

செய்திப்பிரிவு

திருத்துறைப்பூண்டி தொகுதி யில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு, மக்கள் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ப.ஆடலரசன் தலைமையில் கட்டிமேடு அரசினர் தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அப்போது, பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணிகள், மின்வாரிய செயல்பாடுகள், கரோனா தடுப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து, கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில், தொடர்புடைய இடங்களுக்கு எம்எல்ஏ சென்று, அப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT